கு. அழகிரிசாமி கட்டுரைகள் அறியாத உலகின் அறிமுகம்
ஓவியம்: டிராட்ஸ்கி மருது
கு. அழகிரிசாமி எழுதிய கட்டுரைகளைத் தோழர் பழ. அதியமான் தொகுத்துக் காலச்சுவடு வெளியீடாக இரு பெரும் தொகுதிகளாக வெளிவந்து கு. அழகிரிசாமிமீது நாம் கொண்டிருந்த மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
783 பக்கங்களில் விரிகிற இரண்டாவது தொகுப்பு பழந்தமிழ் என்றும் 879 பக்கங்களிலான முதல் தொகுப்பு நவீனத்தமிழ் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. நவீன வாசகர்கள் மிரண்டுவிடக் கூடாது என்பதற்காகப் பழந்தமிழ்ப் பாடல்கள் குறித்த கட்டுரைகளை இரண்டாவது தொகுப்பாக வைத்தார்போலும் பழ. அதியமான்.
“பழம் பாடல்கள் நமக்கு எங்கே புரியப்போகிறது என்று இந்தப் பாடல் விளக்கக் கட்டுரைகளைக் கண்டு நவீன வாசகன் ஒவ்வாமை காட்ட வேண்டியதில்லை. விளக்கப்படுபவை பழம் பாடல்களாக இருக்கலாம். ஆனால் விளக்குபவர் நவீன எழுத்தாளர். இன்றைய வாசகர