முப்பது ஆண்டு உறவு
நெய்தல் விழாவில் (2018) பெருமாள்முருகனிடமிருந்து ‘காலச்சுவடு சிறந்த ஊழியர்’ விருதுபெறும் நாகம்
காலச்சுவடு இதழுடனான என் தொடர்பு ஓர் உள்ளூர் நாளிதழ் விளம்பரம் மூலம்தான் ஏற்பட்டது. அந்த அறிமுகமும் உறவும் கடந்த முப்பது ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் இனிமையாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
1995 ஆம் ஆண்டு மே மாதக் கடைசி என்று நினைக்கிறேன். அப்போதுதான் நாகர்கோவிலில் ஒரு நாளிதழில் ‘தட்டச்சு தெரிந்தவர் வேலைக்குத் தேவை’ என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். அதில் கொடுத்திருந்த முகவரியில் நேரில் சென்று பார்த்தேன். மைதிலி அக்காதான் முதலில் என்னைப் பார்த்துப் பேசினார். பின்னர் சுந்தர ராமசாமி, கண்ணன் அண்ணன் ஆகியோர் என்னைப் பற்றி விசாரித்துவிட்டு அடுத்த நா