அவர்களுக்கு என்னைப் பிடிக்காது
கோகேயுடன் சுரேஷ் கனகராஜா
அற்புதமான எழுத்தாளர் கோகே வா தியங்கோ காலமானது மிகவும் துயர் தருகிற செய்தி. அவர் என்னுடைய இனிய நண்பர் என்பதால் துயரம் இரட்டிப்பாகி விடுகிறது. பலர் அவரை ‘நுகூகி’ என்று அழைப்பார்கள். அவரை நான் முதன்முறை சந்தித்தபோது “உங்களை எப்படி அழைப்பது” எனக் கேட்டேன்’ தன்னுடைய சொந்த மொழியில் “கோகே” என்றுதான் அழைப்பார்கள் என்றார்’. அன்றிலிருந்து அவரைக் கோகே என்றே அழைக்கத் தொடங்கினேன். கோகேயின் எழுத்துக்களை இலங்கையில் நான் மாணவனாக இருக்கும்போதே அறிந்திருந்தேன். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பாடத்தை என்னுடைய இளங்கலைமாணி பட்டத்திற்குச் சிறப்புப் பாடமாகத் தெரிந்தெடுத்திருந்தேன். எனவே இறுதி ஆண்டில் ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டும். என்னுடைய சக நண்பர்கள் சிலர் மேற்கத்தேய எழுத்