அம்பு எய்யாத வில்
திராவிடர் இயக்கம் நூறாண்டு கண்டுவிட்டது; அதிகாரத்தை அடைந்தும் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. காலச்சுவடுவில் ‘திராவிட இயக்க நூற்றாண்டு’ எனும் சிறப்புப் பகுதி மட்டுமல்லாது முன்னரும் திராவிட இயக்கம் குறித்த கட்டுரைகள் வெளியாயின.
திராவிட இயக்க வரலாற்றைத் தன் பார்வைகளில் விளக்கும் மூன்று கட்டுரைகள் இச்சிறப்புப் பகுதியில் உள்ளன. திராவிட இயக்கச் சாதனைகளைவிட தோல்விகளைப் பட்டியலிடுகிறது க. திருநாவுக்கரசுவின் கட்டுரை. திராவிட இயக்க முழு வரலாற்றையும் இன்றைய நாளில் நின்று பார்க்கும் உள்வெளிகள் நிரம்பிய கட்டுரை அது. ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை, திராவிட இயக்க வரலாற்றில் அண்ணாவைக் கண்டுகொள்ளாத அறிவுஜீவிகளின் போக்கைக் கவனப்படுத்துகிறது. ஆ. திருநீலகண்டனின் கட்டுரை சுயமரியாதை இயக்கம் கண்ட களப்போராட்டம் ஒன்றைக் கவனப்படுத்துகிறது. இன்றைய நிலையை அடைய திராவிட இயக்கம் போராடிய பெரிதும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட நீடாமங்கலம் சம்பவத்தைப் பற்றியது அக்கட்டுரை.
பல குரல்கள் ஒலிக்கும் சிறப்புப் பகுதி இது. முழுவதும் நியாயம் என்றும் முழுவதும் தவறு என்றும் வரலாற்றில் எதுவும் இல்லை. எல