காவியும் அதிமனிதர்களும்
‘அரசன் தவறிழைக்கமாட்டான்’
-மத்தியகால முதுமொழி
நாகசேனர் என்னும் பௌத்தத்துறவிக்கும் இந்தோ கிரேக்க அரசன் மிலிந்தருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மாவின் நிலை குறித்த உரையாடல் அது. ஆன்மாவின் நிலையை மிலிந்தருக்கு விளங்கவைப்பதற்காக நாகசேனர் தீவிரமான உரையாடலை நடத்திவந்தார். அப்போது நாகசேனரின் உடலைக் காட்டி மிலிந்தர் கேட்டார்: “நாகசேனர் என்பவர் அவரது நகமா, பல்லா, தோலா, சதையா அல்லது உடலா அல்லது புலன் உணர்வுகளா அல்லது புலன் அறிவா, மனநிலைகளா, பிரக்ஞையா?”. இக்கேள்விகளுக்கெல்லாம் நாகசேனர் எதிர்மறையாகவே பதில் தந்தார். மிலிந்தருக்குக் கோபம் வந்தது. “இதன் பொருள் நாகசேனர் என்பவர் கிடையாது. அது வெறும் பெயர்தான். நீ பொய் சொல்கிறாய். நீ பொய்யான ஒன்றை விளக்குகிறாய்” என்றார் ம