நீடாமங்கல இழிவின்கொடுமை
சென்னை மாகாணத்தில் வைதீக இறுக்கமும் சாதிய நிலவுடமை ஒடுக்குதல்களும் நிரம்பப் பெற்றிருந்த பகுதி (பழைய) தஞ்சை மாவட்டம் ஆகும். அந்நாளில் தடையின்றிப் பாய்ந்த காவிரி நீரால் வளம் கொழித்திருந்த நிலவுடமைச் செருக்கும் அது ஏற்படுத்தியிருந்த மிதமிஞ்சிய உபரியும் இதற்கான முக்கியப் பின்புலங்களுள் சில. இத் தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய
திருவாரூர் மாவட்டம்) தஞ்சாவூர் - திருவாரூர் பெருவழியில் அமைந்துள்ள வளமிக்க ஊர்தான் நீடா மங்கலம். காவிரியின் கிளை ஆறான வெண்ணாறு இவ்வூரைத் தழுவிச் செல்கிறது. தஞ்சை, திருவாரூர், கும்பகோணம் என்ற முக்கோணங்களிடையே மன்னார்குடி தாலுகாவில் இவ்வூர் அமைந்துள்ளது.
வேதப் பார்ப்பனர்களின் முற்றுரிமை உடைய பகுதி என்பதை உணர்த்தும் பெயர்ச்சொல் ‘மங்கலம்’ என்பது. நீடா மங்கலமும்1 இதற்கு விலக்கல்ல. வைதீகர்கள் மற்றும் நிலவுடமையாளர்கள் ஆதிக்கம் பெருத்த இவ்வ