இயல்விருது விழா
ராறொன்ரோவில் 2017, யூன் 18ம் தேதி அன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினேழாவது இயல் விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தனது இலக்கியப் பணிகளில் சமரசம் செய்துகொள்ளாமல் கவிதை, புனைவு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பலதுறைகளிலும் சலிக்காமல் தொடர்ந்து உழைத்துவருவதுதான் இவருடைய சாதனையாகும்.
இயல் விருதைத் தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன.
சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட கால