எதார்த்தத்தை மறைக்கும் புனைவுகள்
இது திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த ஐம்பதாவது ஆண்டு; அவற்றின் மூல அமைப்பாகக் கூறப்படும் நீதிக்கட்சியின் பிராமணரல்லாதார் அறிக்கை வெளியிடப்பட்டு (1917) அமைப்பின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகள் ஆரம்பித்ததின் நூறாவது ஆண்டும்கூட. மேலும் இது திராவிட அடையாள அரசியலுக்கு வித்திட்ட ‘திராவிடமொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கம் எல்லீஸால் வெளியிடப்பட்ட இருநூறாவது (1816) நிறைவாண்டு; திமுக ஆட்சிக்கு வருவதற்கு உடனடிக் காரணமாக அமைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து (1965 - 2015) ஐம்பதாண்டுகளும் நிறைவடைந்திருக்கின்றன. இத்தகைய திருப்ப ஆண்டுகள் அடிப்படையில் திராவிட அரசியல்பற்றிப் பல்வேறு பார்வைகளில் விமர்சனபூர்வமான ஆய்வுகளும் விவாதங்களும் நடந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறேதும் நடந்துவிடவில்லை.
குறிப்பிட்ட காலகட்டத்தையோ இயக்கத்தையோ முழுமையாகப் புரிந்துகொள்வதென்பது அது என்னவெல்லாம்