பயணம் தொடர்கிறது
இந்தியப் பெருங்கடலில் இருந்த, இன்னும் இருக்கும், அணுவாயுதங்களுடன் கூடிய அமெரிக்க, (சோவியத்) ரஷ்ய, பிரிட்டானிய, பிரெஞ்சு கப்பற்படைத் தளங்களை, கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணுமின் திட்டங்களை எல்லாம் எனது கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து எதிர்த்து வருகிறேன். கடந்த 1998ஆம் ஆண்டிலிருந்தே கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிராகக் களமாடி வருகிறேன்.
ஆளும் வர்க்கத்துக்கு அதீத லாபம் சம்பாதித்துக் கொடுக்கும், ஆட்சிக் கட்டிலிலும் அதனருகிலும் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குக் கோடிகோடியாகத் தரகுப்பணம் வாங்கிக் கொடுக்கும் - அதிகாரிகளுக்குத் கிம்பளமும் கிடைத்தற்கரிய சொத்து சுகங்களும் பெற்றுக் கொடுக்கும் மாபெரும் ‘வளர்ச்சித் திட்டங்கள்’ அவர்கள் அனைவருக்குமே மிகமிக முக்கியமானவை. அவர்கள் மட்டுமே ‘தேசம்’ என்பதால், இத்திட்டங்கள் தேச நலனுக்கானவையாக இருக்க, இவற்றை எதிர்க்கும் சா