மீச்சிறு பெருவாழ்வு
மீச்சிறு பெருவாழ்வு
மழைக்காலத்தில் நிரம்பித் தளும்பும்
பரந்த ஏரியைப்போல
எனக்குப் பிரியமானவள் நீ
கனிந்து விரிந்த மலரின்
கனத்த வாசனையென
என்னுடையவள் நீ என்னும் சொற்களை
நினைவின் அடுக்குகள் சொல்லச்சொல்ல
கை எழுதுகிறது
நமக்கிடையே தொலைவுகள் உண்டெனினும்
அவற்றைச் சிறு வளையங்களாக்கி
உள்ளுக்குள்
நான் விழுங்கிவிடுவதை அறிவாயா
காற்று வீசுகையில்
என் ஒற்றைமுடி கலைந்தாலும்
நீ எதற்காகவோ வாய் திறந்தாயென
நினைத்துக் கொள்கிறேன்
கானகத்தில் நீ நுழைந்தாயா
உன்னிடத்தில் அது வந்து சேர்ந்ததா
சுழலும் அன்பின் பூமி
அருகருகே சேர்க்கவில்லை
என்னைப் போலவே
நீயும் அங்கேயேதான் நிற்கிறாய்
ஆயினும்
உன் கால்களுக்குக் கீழேதான்
என் வேர்கள் கிளைத்திருக்கின்றன
உன் தலைமீதுதான்
என் பூக்களின் இதழ்கள் உதிர்கின்றன
உனதிரு கண்களில் சுரக்கும் அன்பினைப்
பருகக் கொடுக்கிறாய்
அந்திப் பரிதியெனச் சாந்தமடைகிறது
என் மீச்சிறு பெரு