தீராத திருநாள்
சாயந்திரம் ஐந்து மணிக்குள் முப்பது கிலோ ரொட்டி வீசியிருந்தான். அதில்லாமல் இருபதுகிலோ மாவில் தோசை ஐட்டங்கள். ஒரு நிமிடம்கூட நிற்க நேரம் இல்லை.
வானத்தில் சின்னத் துண்டு மேகம்கூட இல்லை. வெய்யில் உக்கிரமாய் இருந்தது. உடல் வியர்த்து ஊற்றிக்கொண்டே இருக்கிறது.
இந்த ஊரில் இன்று திருவிழா. ஜம்புக்கு வேலை செய்யும் மனநிலையே இல்லை. தொடர்ந்து நாலுநாள் வேலைசெய்துவிட்டான்; நாலு நாளும் டவுன் கடைகள். இதேபோல பரபரப்புதான். இன்று ஏற்காடு போகலாம் என்றிருந்தான்.
காலையில் இந்த முதலாளி ஸ்டாண்டுக்கு வந்து நின்றான். முகூர்த்த நாள் என்பதால் மாஸ்டர்கள் எல்லாம் கல்யாண வேலைக்குப் போய்விட்டார்கள். ஒருத்தரும் இல்லை. இவன் அதை யோசிக்கவில்லை. தெரிந்திருந்தால் அங்கே படுத்திருக்க மாட்டான். லோகு அவனைத் தட்டி எழுப்பினார். “ஜம்பு, சின்னக்.... கடை தாம்பா. பெருசா ஒண்ணும் வேலை இருக்காத