மனிதர்களைவிட மாடுகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மாடுகளும் முன்னுக்கு வந்துவிடுகின்றன. மாடுகள் புனிதமானவை, தெய்வத்திற்கு இணையானவை என்ற தொன்மம் சார்ந்த நம்பிக்கைகளை அது புத்துயிர்ப்பு செய்கிறது. அதற்காக மாடுகள் விற்பனை தொடங்கி மாட்டிறைச்சி உண்பதைத் தடுப்பது வரையிலான நிலைக்கு அது சென்று விடுகிறது. இதன்மூலம் இந்தியாவின் பன்முகப்பட்ட சமூக அமைப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதன் முடிவானது சகிப்பின்மைக்கு இட்டுச் செல்வதுடன், இந்தியாவின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டையும் கேள்விக்குட்படுத்துகிறது. உண்மையில் மேற்கண்ட நிலையை அடைவதற்கான அரசியலாகவும் அது இருக்கிறது. இதற்கான தொடக்கம் 19ஆம் நூற்றாண்டாகும்.
இந்துசமயச் சீர்திருத்த, புத்துயிர்ப்பு இயக்கங்கள் தோன்றிய அந்தக் காலத்தில் பசு புனிதப் பொருளாகப் பார்க்கப்பட்டது. இதில் பிரிட்டிஷ்கால காங்கிரஸ்கூட மாறுபட்ட கரு