உத்திரபிரதேசத்தில் தலித் உறுதி
உத்திரபிரதேசத்தில் சகாரன்பூர் மாவட்டத்தில் தாக்கூர், தலித்களுக்கு இடையிலான மோதல்களும், ஆட்சி மாறியதையடுத்து சமூக உறவுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளும் அங்கு கலாச்சார வலியுறுத்தல்களின் மோதல் உருவாகியிருப்பதைக் காட்டுகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதிக் கட்சியும் உபியின் சமூக அரசியல் வெளிகளில் ஜனநாயகமயமாக்கத்தைப் படிப்படியாகக் கொண்டுவந்தன. தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் அந்த இரண்டு சமூகங்களின் குறைந்தபட்ச சமூக கண்ணியத்தை உறுதிப்படுத்த அந்த ஆட்சிகள் முயன்றன. பாரதீய ஜனதா கட்சியின் சமீபத்திய வெற்றியும் யோகி ஆதித்யநாத் முதல்வராக நியமிக்கப்பட்டதும் அந்த மாநிலத்தில் முன்னேறிய சாதியினர் அரசியல் அதிகாரத்தின் தலைமைக்கு வந்திருப்பதைக் காட்டுகிறது. இதன்மூலம் துணிவு பெற்ற தாக்