தமிழர் பண்பாட்டில் மாட்டிறைச்சி
பண்டைத் தமிழர்கள் தம் வாழ்க்கைத் தேவைக்காகக் காட்டுவிலங்குகள், பறவைகள் சிலவற்றை வீட்டில் வளர்க்கத் தொடங்கினர். இவற்றுள் பசு, காளை, எருமை ஆகிய மாட்டினங்களும் அடங்கும். வேட்டைச் சமூகம் என்று கூறத்தக்க குறிஞ்சி நிலத்திலேயே ஆநிரை வளர்ப்புத் தொடங்கி விட்டது. ‘ஆமா’ என்று காட்டுப் பசுவை அழைத்த பண்டைத் தமிழர்கள், அதைப் பழக்கி வீட்டில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
வேட்டைச் சமூகத்தை அடுத்து உருவான மேய்ச்சல் நிலச் சமூகமே முல்லைத்திணை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. மேய்ச்சல் நில வாழ்க்கையானது, கால்நடைகளுக்குப் புல்தேடி இடம்பெயரும் நாடோடி வாழ்க்கை, உழு தொழிலுடன் இணைந்த கால்நடை வளர்ப்பு என இரு வகைப்படும். முல்லைத்திணை வாழ்க்கையானது வேளாண்மையுடன் இணைந்த கால்நடை வளர்ப்பைக் கொண்டிருந்தது.
முல்லைத் திணையில் வாழும் ஆயர்கள் தாம் வளர்க்கும் கால்நடைகளின் அடிப்படையி