முன்னோடி பவுத்த அறிஞர் லட்சுமி நரசுவும் பாரதியும்
பாரதியால் சமகாலத்திலும், அம்பேத் கரால் பிற்காலத்திலும் சிறப்பித்துப் பேசப்பட்டவர் பேராசிரியர் லட்சுமி நரசு.
லட்சுமி நரசுவைப் பற்றிய எண்ணம் எழுகையில் ஆராய்ச்சியாளர்கள் சிலருக்குப் பாரதியின் பதிவும், சிலருக்கு அம்பேத்கரின் பதிவும் சட்டென ஞாபகத்திற்கு வரும். அலாய்சியஸ் உள்ளிட்ட ஆய்வாளர்கள் லட்சுமி நரசுவைப் பற்றிப் பேச நேர்ந்த தருணங்களில் அம்பேத்கரின் பௌத்தச் சிந்தனைகளுக்கு முன்னோடியாக அவர் முகங்காட்டுவதைப் பதிவு செய் திருக்கின்றனர்.
லட்சுமி நரசுவின் பௌத்தம் குறித்த ஆங்கில நூலை அம்பேத்கர் முன்னுரை வரைந்து அறிமுகம் செய்திருக்கின்றார் என்பது நரசுவின் ஒப்பற்ற பேரிடத்தைக் காட்டும். ‘The Essence of Buddhism’ நூலின் மூன்றாம் பதிப்பு 1948இல் வெளிவந்தபோது அதற்கு அம்பேத்கர் எழுதிய அரிய முன்னுரையில் நரசுவைப் பற்றி விரிவாக அறிவதற்காகத் தாம் மேற்கொண்ட முயற்சியைக் குறிப