ஒரு நதியின் மரணம்
மதுரைத் தியாகராசர் கல்லூரி விடுதியில் 1965 சனவரி 25 இந்தி எதிர்ப்பு ஊர்வலத்துக்கான அனைத்துக் கல்லூரி, உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரதிநிதிகளின்ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மதுரைநகரின் நடுவில் அமைந்த திடலுக்கு அவரவர் இடத்திலிருந்து பேரணியாய் வருவது, இந்தியை ஆட்சிமொழியாய் அறிவிக்கும் அரசியல் சட்டப் பிரிவை நீக்குக, ஆங்கிலமே ஆட்சிமொழியாக நீடிக்க வகை செய்க - என்னும் இரு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றுவது என முடிவு செய்தோம். இந்தியே ஆட்சிமொழி என்று அறிவிக்கும் சட்டப்பிரிவைத் தியாகராசர் கல்லூரி மாணவ நண்பர்களான நா. காமராசனும் கா. காளிமுத்துவும் எரிப்பதென முன்வந்தனர். நா. காமராசன், பா. செயப்பிரகாசம், கா. காளிமுத்து, கவிஞர் இன்குலாப் ஆகியோர் முன்பின்னான ஆண்டுகளில் ஒருசாலை மாணாக்கர்கள்.
சனவரி 25, காலை பத்து மணிக்குத் தியாகராசர் கல்லூரி மாணவர்கள் பேரணியாய்த் திடலைச் சென்றடைய, காமராசனும் காளிமுத்த