புதிய பட்டுச் சாலை
சீனா உலகின் இரண்டாம் பெரிய பொருளா தாரம் என்ற நிலையை அடைந்த பிறகு, குறுகிய காலத்தில் உச்ச இடத்தை அடைய அது தீவிரமாகச் செயற்படுவதாகத் தெரிகிறது. புவியரசியலிலும் பொருளாதாரத்திலும் மேலான இடத்தை அடைவதற்கான பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இதைச் சீனா செய்கிறது. இருபத்தெட்டு அரசுகளின்/அரசாங்கங்களின் தலைவர்கள், 100 நாடுகளின் பிரதிநிதிகள், பல சர்வதேச அமைப்புகள் மே 14-15 தேதிகளில் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் சர்வதேச ஒத்துழைப்பிற்கான கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் ‘பட்டுச்சாலைப் பொருளாதார மண்டல’த்தையும் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ அல்லது ‘மண்டலம் மற்றும் பாதை முயற்சி (பிஆர்ஐ)’ என்று அழைக்கப்படும் 21ஆம் நூற்றாண்டின் கடல்சார் பட்டுச் சாலைத் திட்டத்தையும் தொடங்கினர். பிஆர்ஐ பல சாலைகளையும் ரயில் பாதைகளையும் துறைமுகங்களையும் ஐரோப்பாவையும் பல்வ