நிகழ்கால அரசியலை நிகழ்வுகளாக்குதல்
2017ஜூன் 19 அன்று பெங்களூருவில் நான் பார்த்த கன்னட நாடகம் ‘வர்த்தமானதெ சரிதே.’ அந்நாடகத்திற்கு நான் அழைக்கப்பெற்ற சிறப்புப் பார்வையாளன்; நான் மட்டுமல்ல, கர்நாடகாவிலிருந்து இருவர், தெலங்கானாவிலிருந்து டெல்லியிலிருந்து தலா ஒருவர் என இன்னும் ஐந்து சிறப்பு அழைப்பாளர்கள் இருந்தனர்; பொதுப்பார்வையாளர்களும் இருந்தனர். அனைவரையும் இழுத்துவைத்துப் பார்த்து ரசிக்கச் செய்த நாடக நிகழ்வு அது.
இந்தியில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற (2011) பேரா. காசிநாத்சிங்கின் ‘கவுன் தக்வா நகரிய லூட ஹொ (Kaun thagwa Nagariya Luta ho)’ சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து நாடகமாகத் தழுவி, வடிவமைத்து இயக்கியவர் தமிழின் முக்கிய நாடக ஆளுமையான ப்ரசன்னா ராமஸ்வாமி. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளித்த நிகழ்வு அந்தநாள். ப்ரசன்னாவோடு அந்நாடகத்தில் மேடையிலும் பின்னரங்கிலு