மரணம் கொத்திச் சென்ற கவிஞன்
வேலிக்கு வெளியே தலையை நீட்டிய
என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே...
வேலிக்கு அடியில் நழுவும்
என் வேர்களை என்ன செய்வாய்..?
கவிக்கோ அப்துல் ரஹ்மான் தோட்டத்தில் கவிதைகள் இப்படித்தான் பூக்கத் தொடங்கின. அரை நூற்றாண்டு ஆனபிறகும் இவை வாடிப்போகவில்லை. இன்னும் மணம் வீசும் இக்கவிதைகள் முதன்முதலாக ‘பால்வீதி’ தொகுப்பாக 1970களில் வெளிவந்தது. நவீன கவிதை மரபு அகம்சார்ந்த, மனம்சார் குரலாக ‘எழுத்து’ இயக்கமாகவும் புறம்சார்ந்த உரத்தகுரல் ‘வானம்பாடி’ இயக்கமாகவும் இரு வழிப்பாதைகளில் பயணித்தது. மூன்றாவது பாதையாக மார்க்ஸியப் பின்புலம் சார்ந்த கவிதை இயக்கமும் ஊடாடியது.
பால்வீதியில் ஒரு பறவையின் தடம்
நவீனத்துவக் கவிதை மரபைத் தொடக்க காலத்தில் முக்கியத்துவப்படுத்தி எழுதிய கவிக்கோ, வானம்பாடி மரபின் படைப்பாக்