பழ. அதியமானின் ‘பாம்புக்கட்டுரை’ பாம்பைப்போல வளைந்து நெளிந்து பல்வேறு கோவைத்தகவல்களைச் சட்டையாய்க் கழற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறது. முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத் தூதர் மூசா (மோஸஸ்) கையில் இருந்த ஊன்றுகோல் அவ்வப்போது கொடுங்கோல் அரசனை மிரட்ட, பாம்பாக மாறும் என்ற செய்தியும் நினைவுக்குள் ஊர்ந்துபோனது.
முஸ்லிம்கள் தங்களது அதிகப்படியான பொருள் வளத்தை முறையாகக் கணக்கிட்டு மொத்த இருப்பில் நாற்பதில் ஒன்றைத் தர்மமாக ஏழை எளியவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். இல்லையெனில் அந்தச் செல்வங்கள் மலைப்பாம்பாக மாறி அவனை அவனது மரணத்திற்குப் பின் வேதனைசெய்யும் என்ற முகம்மது நபியின் முன்னெச்சரிக்கையும் கூடவே வந்துபோனதும் மறக்க முடியாதது. தவிர, இன்றைய தமிழகச் சூழலில் இஸ்லாம் குறித்துப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் இன்னும் நிறைய தலைப்புகள் இரவுபகலாகக் காத்துக் கொண்டிருக்கிற வேளையில் பெண்ணின் கத்னா பற்றிய உரையாடல் தேவையற்றதே! எனினும், பேசாப் பொருளைப் பேசுவதில் காலச்சுவடு முந்திக் கொண்டது.
எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி