‘நாம் பார்ப்போமே’
கவிதை
‘நாம் பார்ப்போமே’
ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ்
இந்தி வழி தமிழாக்கம்: எம். கோபாலகிருஷ்ணன்
நாம் பார்ப்போமே
நாம் பார்ப்போமே
நாம் பார்ப்பதை யாரும் தடுக்கவியலாது என்பதால்
நாமும் அதைப் பார்ப்போமே
உறுதியளிக்கப்பட்டிருக்கும் அந்த நாளில்
விதியின் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் அதை
நாம் பார்க்கத்தான் போகிறோம்
நாமும் அதைப் பார்ப்போமே
குரூரமும் கொடூரமுமான மலைகள் யாவும்
கம்பளி நூல்களென காற்றில் பறக்கும் தருணத்தில்
அடக்கி ஆளப்படும் எம் காலடியிலிருந்து
<