இணரூழ்த்தும் . . .
நினைவு
இணரூழ்த்தும்
ஆ. இரா. வேங்கடாசலபதி
ஒரு பதினேழு வயது இளைஞருக்காகப் பாரதிதாசனும் மு. வரதராசனும் நீதிமன்றப் படியேறி, சாட்சிக் கூண்டில் ஏறி நின்று சான்று கூறினரென்றால் நம்ப முடிகிறதா?
திராவிடர் கழக நாளேடான விடுதலையின் 19 ஜனவரி 1958 இதழில் தஞ்சை சி.என். நெடுமாறன் என்ற பெயர் தாங்கி, ‘இளந்தமிழா! புறப்படு போருக்கு!’ என்றொரு கட்டுரை வெளிவந்தது. வடஇந்தியர் நடத்திவந்த கடைகளையும் பிற வணிகங்களையும் தமிழர் புறக்கணிக்க வேண்டும் என்று அக்காலப்பகுதியில் பெரியார் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை வலியுறுத்தி எழுதிய கட்டுரை இது.
‘கூலியாட்களாக,