நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை
கதை
நாவல் எழுதுவதில் எனக்கு விருப்பமே இல்லை
கலாமோகன்
ஓவியங்கள்: மணிவண்ணன்
தூங்கி முடியமுன் ஒரு கனவு. ஓர் இளம் ஆணின் முகம். வெள்ளைத் தோடுகள் அவனது காதுகளில். அவை இப்போதும் எனக்குள். அவன் ஒரு சிறிய தொழிலாளி. அழகின் சின்னம். அவனை பிஸ்சா கடைக்குள் கண்டேன். இந்த இளையவனின் முகம் சிலவேளைகளில் என் முன் வருகின்றது.
அலாரம் சத்தத்தால் விழித்தேன். காலை நான்கு முப்பது.
மிகவும் காலையில் பாரிஸில் நடப்பது இனியதே. யாழ்ப்பாணத்தில் நடந்தால் நாய்களின் நினைவுகளோடும் பயத்தோடும் நடக்கவேண்டியிருக்கும். பலவீதிகளில் அங்கு நான் நடந்தேன், சயிக்கிள்களை வேகமாக ஓட்டினேன். பல நாய்களில் எனக்குப