
கவிதைகள்
கவிதைகள்
சல்மா
1
தன் முறைக்குக் காத்திருக்கிறார்கள்
அம்மாவின்
இறுகப் பற்றிய கைகளுக்குள்
பொதிந்துகிடக்கும்
சிறுமிகள்
யோனிகள் தைக்கப்படவென
பாலைவனப் பாறைகளில்
சிதறிக் கிடக்கின்றன
மருத்துவச்சியின் கூர்மழுங்கிய
ஆயுதங்களால் அரியப்பட்ட
சிறுமலரினை ஒத்த
கதண்டுகள்
காற்றில் துடிக்கிறது
குருதியில் நனைந்த சிறுமிகளின்
குரல்
குறிகளை அனுமதிக்காத
வெட்டி இறுக்கித்
தைக்கப்பட்டுவிடுகிற
யோனிப் பைக்குள்
சொட்டித்தீரத் தவிக்கு