பெண்களால் வீழும் இந்துத்துவம்
பெண்கள் பெருந்திரளென வீதிக்கு வந்து போராடும் ஒவ்வொரு தருணமும் உயிர்வாழ்தலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை உணர்த்துவது. கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டங்கள் பெருகிவருகின்றன; அப்பெண்கள், உறுதியான அதிகாரத்தை - அதன் வெவ்வேறு வடிவங்களை, நேருக்குநேர் சந்திக்கத் துணிந்திருக்கிறார்கள். ஆபத்தைப் பெண்கள் உள்வாங்கியதன் வெளிப்பாடென இப்போராட்டங்களைக் கருத இயலும். சீரழிந்து வரும் பொருளாதாரம், வேலைவாய்ப்புப் பிரச்சினை, மலையென உயரும் கல்வி - மருத்துவக் கட்டணங்கள், சுற்றுச் சூழல் மாற்றம் - இவற்றால் அழிந்துவரும் வாழ்வாதாரங்கள், வேலைதேடிக் குடிப்பெயர்ச்சி, சுகாதாரமற்ற குடியிருப்பு வசதிகள், வணிகமாக்கப்பட்ட மின்சாரம் - குடிநீர் - எரிவாயு என ஒவ்வொன்றும் பெண்களின் உயிர்நாடியைத் தூண்டி அச்சுறுத்தும் நிலையில் உள்ளன; இத்துடன் சேர்ந்துகொண்ட