உன்னைப் பார்க்கத்தான்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
உன்னைப் பார்க்கத்தான்
உன்னைப் பார்க்கமட்டுமே வந்தேன்
பொய், வந்து நீ பார்த்த
பலவற்றில் நானும் ஒன்று
உன் பேச்சைக் கேட்க
உன் குரலைக் கேட்கமட்டுமே வந்தேன்
புளுகு, செவியில் திணித்துக் கொண்ட
பல குரல்களில் நீ கேட்காது நழுவிய ஒலி எனது
உன்னை ஆரத் தழுவ
தழுவலில் என்னை இழக்கவே வந்தேன்
ஏமாற்று, அணைக்கவும்
அணைக்கப்படவும் ஏங்கியவன்
கவசங்களுடனா வருவாய்?
நிசப்தத்தின் பாழ் வெளியில் மோதி
ஒரே கணத்தில் எதிரொலித்தன
இருவரின் நாடித் துடிப்புகள்
என்னைப் பார்க்க
என்னைக் கேட்க
என்னைத் தழுவ வந்தவன்
இப்போது என்ன செய்கிறாய்?
ஒட்டகத்தின் மேலேறி
ஊசியின் காதுக்குள் ஊர்ந்து கொண்டி