ஒவ்வொரு சின்ன அர்த்தத்தையும் திறந்து பார்த்தல்
கவிதைகள்
ஜீவன் பென்னி
ஒவ்வொரு சின்ன அர்த்தத்தையும் திறந்து பார்த்தல்
1
அவ்வளவு சிறிய இடத்தில் அழுதுகொண்டிருப்பதுபோலத் திடீரெனத் தோன்றுகிறது
எல்லாவற்றிலிருந்தும் அறுபடுதல் எத்தனை மிருதுவானது
இந்த உலகம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது அதன் அர்த்தமின்மைகளால்
திரும்பவும் தன்னை மிகச்சரியாக மடித்து நதியில் விட்டுவிடுகிறது
எதிர்பார்ப்பின்மையை நதி மிக எளிதாகப் பழக்குகிறது.
<img alt="" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_im