அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்
கதை
அவளது உடைமரக்காடும் வெட்டுக்கத்தியும்
அமுதா ஆர்த்தி
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
நாசித் துவாரத்தின் நரம்பிற்குள் பதிந்துவிட்டிருந்தது மணம். கூர்மையான வெட்டுக்கத்தியை எடுத்து மார்போடு அணைத்துப் போர்க்களத்தில் வெற்றிபெற்ற மாவீரனின் இறுமாப்போடு மெல்ல ஒற்றை விரலால் தடவி அதில் ஒட்டியிருந்த உடைமரத்தின் மஞ்சள் நிறத் தூள்களை விரலால் தட்டிவிட்டு மேலிருந்து கீழாக மோந்து பெருமூச்சுவிட்டாள். தோலுரிக்கப்பட்டுத் துண்டாக்கப்பட்ட அடுக்கிய விறகுக் கட்டுகள். உள்ளங்கையில் குத்திய முட்களின் தடம். சில இடங்களில் முள்ளின் முகப்பு ஒடிந்தும் இருந்தது. அடுத்த மரத்தை வெட்டும்