தொடுகறி
கதை
தொடுகறி
ஐ. கிருத்திகா
மின்சாரம் தடைபட்டதில் குப்பென வியர்த்தது. ஏற்கெனவே மனப் புழுக்கத்தில் சரியான உறக்கமின்றி அப்படியும் இப்படியுமாகப் புரண்டுகொண்டிருந்தவனுக்குத் தசைப் புழுக்கம் பெரும் உலைச்சலைத் தர, சட்டென எழுந்தமர்ந்தான்.
ஜன்னல் திறந்திருந்தது. கம்பிகளுக்கிடை புகுந்து வருவதற்குக் காற்றுக்கு என்ன தடையோ தெரியவில்லை. அழையா விருந்தாளியாய் வாசலிலேயே நின்றிருந்தது மரங்கள் லேசாக அசைந்ததில் தெரிந்தது.
சிவநேசன் எழுந்து ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்தான். தூக்கியெறியப்பட்ட வெள்ளித்தட்டைச் சாம்பிராணிப் புகை சூழ்வதுபோல் நிலவை மேகங்கள் சூழ்ந்து விலகின.
வீட்டுக்கருகிலிருந்த வேப்பமரத்தின் கிளையில் அமர