எந்நாளும் அழியாத கவிதை
கட்டுரை
எந்நாளும் அழியாத கவிதை
சுகுமாரன்
2019 டிசம்பர் 17ஆம் தேதியன்று தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த காவல்துறை மாணவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கியது. பலருக்குப் படுகாயமேற்பட்டது. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தின் பகுதியாகவே ஜாமியா மிலியா மாணவர்களும் எதிர்ப்பில் ஈடுபட்டனர். அரசு, காவல்துறை மூலம் மாணவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணித் தடியடியிலும் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சிலும் இறங்கியது. மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதன் எதிர்விளைவு வெவ்வேறு திசைகளிலும் நிகழ்ந்தது. ஜாமியா மிலியா மாணவர் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கான்பூர் ஐஐடி மாணவர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். ஊர்வலத்தில் முழங்கிய ஒரு கவிதை, இந்தியாவின் மாபெரும் கல்வி நிலையம் ஒன்றுக்கு ஒவ்வாமல் போனது நிகழ்கால வரலாற்றின் நையாண்டி.
மீர்சா காலிப், இ