அடையாளத்திலிருந்து அடையாளமின்மைக்கு
அண்மையில் திருவள்ளுவர் தொடர்பான சில இடையீடுகளும் விவாதங்களும் எழுந்தன. அவற்றுள் இரண்டு தலையீடுகள் கவனத்தை ஈர்த்தன. இரண்டுமே அவரின் தோற்றம் தொடர்பானதாக இருந்தது. முதலாவதாக காவிவண்ண ஆடையை அணிந்திருக்கும் வள்ளுவரின் படம். தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட குறளை பாங்காங்கில் நடந்த விழாவில் பிரதமர் மோடி வெளியிட்டதையொட்டி பாஜகவின் இணையதளத்தில் இத்தகைய படம் வெளியாகியிருந்தது. கடந்த சில ஆண்டுகளாக வள்ளுவர் தொடர்பாக பாஜகவின் முன்னாள் எம்.பி. தருண் விஜய் செய்த முயற்சிகளின் தொடர்ச்சியில் இது அமைந்தது. இதற்கு நேரெதிர் தளத்தில் நடந்த முயற்சியை இரண்டாவதாகக் குறிப்பிடலாம். 2019 டிசம்பர் நான்காம் நாள் ஜெர்மனியில் நடந்த தமிழ் விழாவில் வள்ளுவரின் இரண்டு ஐம்பொன் சிலைகள் திறக்கப்பட்டன. சிலைகளில் ஒன்று அமர்ந்தவாறு