அவர்களைப் பொறுத்தவரை நான் துரோகி
முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவரான டி.எம். கிருஷ்ணாவின் கருத்துலகச் செயல்பாடுகள் கலையுலகைத் தாண்டியும் அவரைக் கவனத்திற்குரிய ஆளுமையாக நிலைநிறுத்தியிருக்கின்றன. கலையுலகிலும் கருத்துலகிலும் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கும் கிருஷ்ணாவின் இரு நூல்கள் கடந்த டிசம்பரில் தமிழில் வெளியானதை ஒட்டி நிகழ்ந்த உரையாடலின் பதிவு இது. தன்னுடைய நூல்கள் ஏற்படுத்திய தாக்கம், அவை தனக்குத் தந்த அனுபவங்கள் ஆகியவற்றைக் கிருஷ்ணா இதில் பகிர்ந்துகொள்கிறார். ‘Southern Music: A Carnatic Story’, ‘Sebastian & Sons’ ஆகிய இரு நூல்களையும் தமிழாக்கம் செய்த எழுத்தாளர் அரவிந்தனுடன் மேற்கொண்ட இந்த உரையாடலில் தன்மீதான விமர்சனங்களைக் குறித்தும் கிருஷ்ணா பேசுகிறார். கிருஷ்ணாவின் இசையைப் போலவே அவருடைய உரையாடலும் கேட்பவரைக் கட்டிப்போடக்கூடியது. சென்னைப் புத்தகக் கண்காட்சியின்போது காலை நேரச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்த சுவையான உரையாடலின் பதிவு இது. பாதுகாப்பான ஆட்டத்தில் பலரும் ஈடுபட்டுள்ளதொரு களத்தில் பாதுகாப்பைப் பற்றிய கவலையின்றி மனசாட்சியின் குரலுக்குச்