கவிதைகள்
கவிதை அல்லது சொற்களை அழித்தல்
கவிதை என்றால் என்ன என்கிறாய்?
உயிர்வாழும் ஒரு முறை என்கிறேன்
கவிதை எதனாலாயது என்கிறாய்?
சொற்களால் அல்ல என்கிறேன்
எங்கிருந்து வருகிறது கவிதை என்கிறாய்
மூலப் பெருங்காற்றின் வேர்கள் ஒடுங்கும்
குகை உச்சிகளிலிருந்து என்கிறேன்
ஏன் கவிதை என்கிறாய்
யாத்திரை செய்ய என்கிறேன்.
கவிதைக்குத் தர்க்கம் கேட்கிறாய்?
அதர்க்கத்தின் தர்க்கம் என்கிறேன்
கவிதை எழுதுகிறாயா என்கிறாய்
இல்லை கண்டெடுக்க ஆசீர்வதிக்கப்பட்டேன் என்கிறேன்
எதுவாயுள்ளேன் என்கிறாய்
கவிதையாய் என்கிறேன்
நீ கவிஞனா என்கிறாய்
இல்லை ப