மீட்பர் மனநிலையற்ற ஜெய் பீமும் இன்னபிற திரைப்படங்களும்
கடந்த இருபத்தாறு வருடங்களாகச் சர்வதேசக் கலைப்படங்களுக்கெனப் பிரத்தியேகமான திரைப்பட விழாவைக் கேரள சலசித்திர அகாதமி ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கேரளத் திரைவிழா தனித்துவமானது. இந்திய அரசால் ஒருங்கிணைக்கப்படும் கோவா இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் அரசியல் தலையீடுகளும் வணிக நோக்கமுள்ள திரையிடல்களும் இருக்கும். ஒப்பீட்டளவில் கேரள திரைப்பட விழா அவ்வாறான தாக்கத்தைப் பெற்றது அல்ல. மேலும் ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே அவ்விழா வளர்ந்துள்ளதைப் பங்கேற்பாளராக நம்மால் உணர இயலும்.
பெருந்தொற்று காரணமாக 2020 டிசம்பரில் நடைபெறவிருந்த திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் திருவனந்தபுரம், கொச்சி, தலசேரி, பாலக்காடு,