கணினித் தலைமுறையின் இலக்கியப் பங்களிப்பு
கணினித் தலைமுறையிலிருந்து வரும் எழுத்துக்கள் மரபான எழுத்துக்களிலிருந்து நிச்சயம் வேறுபட்டுத்தான் இருக்கும். அதற்கு முதல் காரணம் அவர்கள் தங்களுக்கென்று ஒரு மொழியைக் கண்டுபிடித்து வைத்திருப்பது. மொழிதானே படைப்பின் மூல காரணம்? 2004இல் சேத்தன் பகத்தின் புத்தகம் ‘ஃபைவ் பாயிண்ட் சம்ஒன்’ வெளிவந்தது. அது கணினி யுகத்திற்கு முந்திய மத்தியதர வர்க்கக் கனவான ஐஐடி மோகம் பற்றியது. ஆனால் அவரது அடுத்த படைப்புகளில் ஒன்றான ‘விளி மையத்தில் ஓர் இரவு’ (ஒன் நைட் அட் கால் செண்டர்) கணினித் தலைமுறை எழுத்துக்குக் கட்டியம் கூறுவதாகும். அதில் சராசரியான இந்திய மத்தியதர வர்க்கத்தினருக்கு மென்மையான அதிர்ச்சி தரும் விவரணைகள் இருந்தன. பரவலாக அள்ளித் தெளிக்கப்பட்ட