கோத்தபாயவுடன் ஜனாதிபதி முறையும் ‘Go Home'
இந்தத் தலைப்பில் பெரியதொரு பரிகாசம் இருக்கிறது. கோத்தபாயவை வீட்டுக்குச் செல்லுமாறு கோரி இப்போது தெருவிலிறங்கிப் போராடிக்கொண்டிருக்கும் பொதுமக்கள் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்தும் விலகுமாறு வலியுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அத்தோடு, அவர் தனது வீடிருக்கும் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற கருத்தும் அதனூடு வெளிப்படுகிறது. இதற்கிடையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையும் அமெரிக்காவில்தான் பிறந்தது. கோத்தபாயவுடன் அந்த ஜனாதிபதி முறைமையும் தமது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறும்போது இருவரும் ஒரே நாட்டுக்குச் செல்லவிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.
தற்போது இலங்கை முழுவதும் சாலை மறியல் போராட்டங்கள் பரவியுள்ளன. கடந்த ஓரிரு மாதங்களுக்கும் மு