“ஈனப் பறையர்க ளேனும்...” பாரதி பாடல் சர்ச்சை
வினாக்களுக்கும் விமர்சனங்களுக்கும் இடம்தரும் பாரதியின் பாடற்பகுதி “ஈனப் பறையர்களேனும் – அவர், எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவ ரன்றோ?” என்பதாகும். பாடல் எழுதப்பட்டு வெளிவந்த, பொது நிகழ்வுகளில் பாடப்பட்ட சமகாலத்திலேயே இதனை அயோத்திதாச பண்டிதர் பின்வருமாறு விமர்சித்தார்:
ஓர் சீர்திருத்தக்காரன் வெளிவந்து பிரசங்கிக்குங்கால் சிலக்கூட்டத்தார் செவியில் நாராசங் காய்த்துவிட்டதுபோல் (யீனப் பறையர்களேனும்) என வாய்மதங்கூறலை மற்றொருவன் கேட்டு (யீனப் பாப்பார்களேனும்) என மறுத்துக் கூறுவானாயின் ஒற்றுமெய் நிலைக்குமோ ஒருக்காலும் நிலைக்கா.
(ஒரு பைசாத் தமிழன், 9.10.1907, ப. 4)
விமர்சனத்த