கவிதைகள்
மாடு
கொம்பு சீவப்பட்ட
இளங்கன்று என்ன செய்யும்
சீவிவிட்டவனையே சீண்டிப்
பதம் பார்க்கத் துள்ளும்
மூக்கணாங்கயிறிட்டு
வீட்டுப்பிராணியாக்கினாலும்
கனலும் அதன் ஊமைக்கோபம்
குட்டிச்சுவரையேனும்
முட்டிச்சாய்க்காமலிராது
எவ்வளவுதான் துள்ளியென்ன
ஒருநாள் அதுவும் வண்டிமாடாகும்
பழகிப்பழகிப் பிறவி மறக்கும்
அதன்பின் மேனிபுகும் தார்க்குச்சி
கொசுக்கடிவலிகூடத் தராது
பொங்கலுக்கு மறுதினம்
கழுத்தில் விழும் நெட்டிமாலை
மகிழ்ச்சியா தருமதற்கு
ஏதோ வெற்றிளைப்பாறல்
இளந்துடுக்கடங்கிப் பேதுற்றுக்
கிழடு தட்டியாகிவி