கல்வி, வேலைவாய்ப்பு: பெருந்தொற்றின் பெருந்தாக்கம்
உலகளாவிய பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கோவிட்-19ஐச் சமாளிக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் வரலாறு காணாத அளவில் மானுடவாழ்வின் பல்வேறு துறைகளையும் பாதித்தது. அந்தப் பாதிப்புகளில் மிக முக்கியமானவற்றில் ஒன்று கல்வித்துறை. முதல் அலையின் தொடக்கத்தில் பள்ளி இறுதித் தேர்வு எழுதாமலேயே அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தப் பாதிப்பு தொடர்ந்துவருகிறது.
முதல் அலையின்போது பொது முடக்கம் தளர்த்தப்பட்ட பிறகும் பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் 2020-21 கல்வியாண்டைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது. இந்தச் சிக்கலை ஓரளவு இலகுவாகக் கையாண்டவை நகர்ப்புறங்களில் இருந்த தனியார் கல்வி நிறுவனங்கள் எனலாம். ஒப்பீட்டளவில் மத்திய, மேல் மத்தி