
இணை
ஓவியம்: பி.ஆர். ராஜன்
சென்னைக்குக் குடிபெயர்ந்த புதிதில், முதன்முதலாக ஒரு அடுக்ககக் குடியிருப்பில் வசித்தோம். அதற்குமுன் பணிபுரிந்த சிறுநகரில், எங்களுக்குச் சொந்தமான தனிவீட்டில் வசித்திருந்தோமா, இங்கே மொசமொசவென்று முப்பத்திரண்டு வீட்டு மனிதர்களுக்கு மத்தியில் வசிப்பது, திறந்தவெளி மைதானத்தில் குடியிருப்பதுபோல உணரவைத்தது. அந்தரங்கம் என்ற ஒன்றே இல்லாமல் போன பிரமை. வளாகத்தின் ஓசை முற்றிலுமாய் அடங்குவதற்குப் பதினோரு மணி ஆகிவிடும்; பனிரெண்டும் ஆகலாம். இத்தனைக்கும் அதிகாலையில் சுறுசுறுப்பாகிவிடுகிற வளாகம்.
இதிலும் ஒரு ஆச்சரியம் இருந்தது - முப்பத்திரண்டு வீடுகளிலும் முதலில் விளக்கணைத்து அமைதி பூணுவது, எங்களுக்கு நேர் கீழே இருந்த வீடுதான்