கிழிவு
ஓவியங்கள்: மணிவண்ணன்
எனது நினைவுகள் பல வேளைகளில் கிழிபடுகின்றன. இவற்றில் எனது பாதங்கள் அமைதியாகவும், சில வேளைகளில் அவதியாகவும் நடந்தபோதும், இந்தக் கிழிவுகளால் எனது மனதும் சிலவேளைகளில் துண்டு துண்டாகின்றன. இந்த நினைவுகளது படங்கள் எனக்குத் தேவையில்லையெனக் கருதினாலும், அவைகளை நான் நினைக்காத வேளையிலேயே என்னருகில் மறைவாக வந்து என்னை எழுப்பும் விந்தையைப் பல தடவைகள் கண்டுள்ளேன். இவைகளில் பல இனியன, இந்த இனியனவுள் நிறையைச் சோகங்களும் உள்ளன. ஆம், பல கசங்கிய மலர்கள், இலைகள், கரைகள், வீதிகள், வீடுகள், நிறைய தென்னை மரங்கள், ஆடுகள், மாடுகள், ஆண்கள், பெண்கள்&he