வெந்து தணியாத நிலம்
இலங்கைத் தீவு, தன் வரலாற்றில் முன்னெப்போதும் தரிசித்திராத பொருளாதார நெருக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கின்றது. இந்நெருக்கடி, தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மக்களைப் பாதித்துள்ளது. பற்றியெரியும் பிரச்சினைகளுக்கான நடைமுறைத் தீர்வெதுவும் கண்ணுக்குப் புலனாகாத நிலையில், அதீதநம்பிக்கையுடன் தாம் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்களைப் பதவி விலகக்கோரி, மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். தீர்க்கதரிசனமில்லாத தலைமைத்துவம், வெற்றியளிக்காத மக்கள் விரோதக் கொள்கைகள், இனப்பன்மைத்துவத்தை இல்லாதொழிக்கும் சட்டங்கள், வரலாறு காணாத ஊழல்கள் எனத் தேசத்தின் ஆன்மாவைச் சிதைத்து நிற்கும் ஆளும்வர்க்கத்தை, பரிபூரணமாக அரசியல் அரங்கிலிருந்து துடைத்தெறிய, நீண்ட சாத்வீகப் போராட்டம் ஒன்றை இன, மதப்