கடுவன்களின் இரண்டாம் கதை
ஓவியங்கள்: ரவி பேலட்
கடுவனின் வால் நீர்ச்சுழியம்போலத் தும்பு மட்டும் வட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்தது. அதன் ஆழ்ந்த பொருள்மீது துல்லியப் புரிதலின்றிப் பார்த்துக்கொண்டிருக்கும் போது தான் திடீரெனக் கேட்டாள், நாம் முதன்முதலாகப் பார்க்கும் முன்னால் எங்கே பார்த்தோம் என்று.கேள்விகள்தான் எவ்வளவு வினோதங்களைக் கொண்டிருக்கிறது? கடுவனின் இருப்பும் கிடப்பும் பார்த்தால் அது தீராத யோசனையில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே கேள்வியை அவள் மீண்டும் பலமாதிரி கேட்கிறாள். பிறகொரு வார்த்தை, இந்த நாய்களைத் துரத்துங்கள் என்பதாக வெளிப்பட்டது.
கண்களைக் கைகளால் வட்டமிட்டுப் புகைப்படம்போலச் சித்திரமாய்க் காட்டிவிட்டு அவள் பூனை வாலைப் பார்த்தபடி இருந்தாள். கண்கள் அதன்மீது நிலைக்குத்தி அவளின் முழுக் கவனமும் கடுவனின் வாலாட்டலில்தான் இருந்தது.</p