சண்டாளனும் பறையனும்: மொழியில் மிஞ்சும் அதிகாரம்
தொலைக்காட்சி விவாதத்தின் தலைப்பு
முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியைச் சாடி அதிமுக மேடைகளில் ஒலித்துவந்த பாடலொன்றை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மேடையில் பாடியதை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பாடலில் ‘சண்டாளர்’ என்ற சொல்லால் கருணாநிதி வசைபாடப்பட்டார் என்பதுதான் துரைமுருகன் மீதான குற்றச்சாட்டு. சண்டாளர், ஒடுக்கப்பட்ட சாதியைக் குறிக்கும் சொல். எனவே அது சாதியத் தாக்குதலாகக் கருதப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார். அச்சுப் பண்பாடு உருவாவதற்கு முந்தைய காலத்தில் கதையாடல்களுக்கும் சொற்களுக்கும் இருந்த தாக்கம் வேறு; அச்சு உருவானபின் அவற்றால் உருவான தாக்கம் வேறு. ஆனால் மேற்கண்ட இரண்டைக் காட்டிலும் தற்போதைய சமூக வலைதளக் காலத்தின் தாக்கம