தலைமுறைகளின் பெரு வாழ்வு
மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி தம் 92ஆம் வயதில் காலமானார். அவரை எழுத்தாளராக அடையாளப்படுத்தியது ‘நாடு விட்டு நாடு’ என்னும் தன்வரலாற்று நூல். ஆங்கிலத்தில் ‘From shore to shore’ என்னும் தலைப்பில் எழுதி வெளியான நூலைப் பின்னர் தமிழில் அவரே எழுதினார். மலேசியாவில் வெளியான அதை வாசித்த ‘தமிழினி’ பதிப்பக உரிமையாளர் வசந்தகுமார் மிகவும் ஈர்க்கப்பட்டு 2005இல் தமிழ்நாட்டுக்கு வந்த முத்தம்மாள் பழனிசாமியை நேரில் சந்தித்து அந்நூலிலுள்ள சில குறைகளைக் களைந்து விரிவுபடுத்தி எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதையேற்று மறுஎழுத்தாக்கம் செய்த ‘நாடு விட்டு நாடு’ நூலை 2007இல் ‘தமிழினி’ வெளியிட்டது. இதுவரை தமிழில் வெளியான தன்வரலாற்று நூல்களில் ஓரிடத்தை இயல்பாகப் பெற்று விளங்குகிறது அது.
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தேயிலை, காப்பி, கரும்பு, ரப்பர் உள்ளிட்ட பணப்பயிர்த் தோட்ட வேலைகளுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் தீவுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களின்