இலக்கிய விழாக்கள் எதிர்கொள்ளும் யதார்த்தம் ஒரு தென்னிந்தியக் காட்சி
“இதுவரை சமஸ்கிருத நூல்கள் யாத்திருக்கிறாய்! இப்போது தெலுங்கு மொழியில் நீ ஒரு காப்பியம் வரைய வேண்டும். பெருவாரியான மக்கள் இங்கே தெலுங்குதானே பேசுகிறார்கள்? நீ ஆண்டாளின் கதையைச் சொல்ல வேண்டும். ஸ்ரீரங்கத்தில் நடந்த எங்கள் திருக்கல்யாணம் பற்றி எழுத வேண்டும். நான் தெலுங்கு தேசத்தை ஆள்பவன். நீயோ கன்னட தேச அரசன். ஆனால் விஷ்ணு பகவான் எல்லோருக்கும் பொதுவானவரில்லையா? காப்பியம் மூலமாக எனது மேன்மையை எல்லோருக்கும் சொல்லு. உனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.”
1515ஆம் ஆண்டு கிருஷ்ணா நதிக்கரையில் கலிங்க மன்னன் கஜபதி பிரதாபருத்ர தேவனுடன் போர்புரிவதற்காக முகாமிட்டிருந்தபோது கிருஷ்ண தேவராயனின் கனவில் தோன்றிய அவனுடைய இஷ்ட தெய்வம் ஆந்திரா விஷ்ணு சொன்ன வாசகங்கள் இவை. கிருஷ்ணதேவராயன்தான் தென்னிந்தியா என்கிற கருத்தாக்கத்தை அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு என்னும் எல்லாத் தளங்களிலும் முன்வைத்தவன். விஜய நகரப் பேரரசை இந்துப் பேரரசு என்று சொல்வதில் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், தென்னிந்திய அளவில் ஒருமைத்தான பண்பாட்டு அடையாளத்தை முன்னிறுத்த அது முயற்சிசெய்தது. ஆங்கி