பா.ரா.சு.: சொற்களைத் தேடும் வேடன்
2009ஆம் ஆண்டில் சென்னை திருவான்மியூரில் உள்ள மொழி அறக்கட்டளை அலுவலகத்தில் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது ஆய்வுத் திட்டப் பணியில் ஆராய்ச்சியாளராகச் சேர்வதற்குச் சென்றிருந்த என்னை உள்ளே அழைத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். வீரன் என்ற சொல் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று கேட்டார். ஆமாம் என்றேன். சங்க இலக்கியத்தில் இச்சொல் நிறைய முறை வந்திருக்குமா என்றார். ஆமாம் என்றேன். எத்தனை முறை இருக்கும் என்று வினவியபோது, எப்படியும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களாவது இருக்கும் என்றேன். எந்த நூலில் அதிகம் இடம்பெற்றிருக்கும் என்றார். வேறு எந்த நூல் ஐயா புறநானூறுதான் என்றேன். சரி அந்த அலமாரியில் உள்ள சங்க இலக்கியச் சொல்லடைவைக் கொண்டுவாருங்கள் என்று சொல்லி வீரன் என்ற சொல் இருக்கும் இடத்திற்குப் போகச் சொன்னார். உள்ளே சென்று பார்த்தேன். அதிர்ச்சி; ஒட்டுமொத்த