எம்.ஏ. நு-ஃமான்: தீக்குள் இருந்தும் சிரிக்கலாம்
சென்ற மாதம், 10ஆம் திகதி பேராசிரியர், பெருங்கவி எம்.ஏ. நுஃமான் எண்பது ஆண்டுகளை இந்தப் பூவுலகில் நிறைவுசெய்துள்ளார். புகழ் மாலைகளும் வேண்டாம்; விருதுகளும் வேண்டாம்; காட்டு மல்லிகைபோல நான் பூத்திருக்கிறேன்; அதுவே எனக்குப் போதும் என்பது அவரது உள்ளம் நமக்குச் சொல்கிற சேதி.
அவருடைய இரண்டு பெருந்தொகை நூல்களை வெளியிடுகிறபோது அவருடைய மொழியியல், கவிதை, திறனாய்வு, அரசியல் சமூகவியல் ஆய்வுகளைப் பற்றி விரிவாக நான் பேசப்போவதில்லை. அவை பற்றிப் பேசவும் உரையாடவும் சிறப்பான நண்பர்கள் பலர் வந்துள்ளனர்.
நுஃமான் மாமா என்றே அவரை எனக்கு மிகச்சிறிய வயதிலிருந்து தெரியும். வேறு எந்தப் பெயராலும் அவரை அழைப்பது எனக்கு மிகுந்த சங்கடம் தரும் செயல். எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்போது அவர் என் அப்பா மஹாகவி உருத்திரமூர்த்தியைச் சந்திக்க எங்கள் யாழ்ப்பாண வீட்டுக்கு வந்திருந்தார். எங்கள் வீட்டின் பெயர் ‘நீழல்.’ வீடுகளுக்குப் பெயர் வைக்கிற மரபு யாழ்ப்பாணத்தில் இருந்தது. அன்று தொடங்கிய உறவு இன்றுவரை நீடிக்கிறது.
இன்று என்னுடைய உரையில், அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்