ஆங்கிலேயர்களை அதிரவைத்த ஆர்ப்பாட்டங்கள்
courtesy: the Economist
இந்தக் கோடையில் ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom – இணைந்த இராச்சியம்) நடந்த சட்டவிரோதச் செயல்களை விவரிக்க ஊடகங்கள் பாவித்த சொற்றொடர் ‘இனக்கலவரம்.’ இது பயனற்றது மட்டுமல்ல, சோம்பறித்தனமானதும் சிக்கலானதும்கூட. இவற்றில் ஈடுபட்ட வர்களும் இவற்றை ஊக்குவித்த அரசியல் சக்திகளும் பல்வேறு தன்மைகள் கொண்டவர்கள். இந்தப் பல் தன்மைகள் அனைத்தையும் மழுங்கடித்து இனக்கலவரம் என்ற ஒற்றை வார்த்தையில் சிறைப்படுத்துவது, எல்லாவற்றையும் ஒற்றையான கடும் பதத்துக்குள் அடக்குவது நரேந்திர மோடித்தனமாகும். நடத்தைகெட்ட இச்செயல் அவற்றின் தனித்தன்மைகளை மறுப்பதும் மறைப்பதுமாகும்.
இணைந்த இராச்சிய வரலாற்றில் மூன்று வெவ்வேறு வன்முறைகள் நடந்திருக்கின்றன: ஒன்று, வலதுசாரி வெள்ளையினத் தேசியவாதிகள் நடத்திய