கலைவெளிப் பயணத்தின் பதிவுகள்
அம்ஷன்குமார் இயக்கத்தில் இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் தாசீசியஸ் குறித்த ஆவணப்படம் சென்னை தாகூர் கலையரங்கில் அண்மையில் திரையிடப்பட்டது.அம்ஷன்குமார் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கலை இலக்கியச் சாதனையாளர்களின் ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். அவருடைய ஆவணப்படங்கள் சாதனையாளர்கள் குறித்த தகவல் திரட்டுகளாக நின்றுவிடாமல் சமகால நோக்கில் அவர்களுடைய கலைப்பார்வைகள், பண்பாட்டுப் பங்களிப்புகள் ஊடாக அவர்களது பயணத்தை நினைவுபடுத்திப் புதிய கவனங்களை வேண்டுபவை. அவ்வகையில் பாரதி, உவேசா, பாதல் சர்க்கார், சி.வி. ராமன், மணக்கால் ரங்கராஜன், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி ஆகியோரின் ஆவணப்படங்கள் வெறும் உணர்வெழுச்சியை ஆதாரமாகக் கொள்ளாமல் அவர்களுடைய கலைப் பயணம்குறித்த ஆதாரமான அடிநாதங்களைப் பின்பற்றி அவர்களுடைய கலை ஆளுமையை முன்வைப்பவை.
தாசீசியஸ் குறித்த ஆவணப்படத்திலும் அவருடைய நாடகப் பயணங்கள், செயல்பாடுகள் வரிசைக்கிரமமாக அடுக்கப்படாமல் நேர்கோடற்ற முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வேர்கொண்டு லண்டன், சுவிட்சர்லாந்து ஆகிய புலம்பெயர் நாடுகளில் கிளைகள் பரப்பிய அவருடைய